பேருந்தில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் இருக்கும் அத்திப்பாக்கம் சோதனைச் சாவடியில் மணலூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் பயணி ஒருவரிடம் இருந்த சாக்கு மூட்டை, மூன்று அட்டைப் பெட்டிகளை சந்தேகத்தின் அடிப்படையில் திறந்து பார்த்த போது அதிகமான புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் அவரை விசாரணை செய்ததில் அவர் சுனில் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சுனிலை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 250 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.