Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ரூ 633 கோடி..? 1967 ல் இருந்து ஆட்சி..! தத்தளிக்கும் சென்னை..! முதல்வருக்கு H ராஜா கிடுக்கு பிடி..!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம். ஏனென்று சொன்னால் இது புதுசா இப்ப வரல. 11க்கு முன்னாள் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சென்னையில் வடிகாலுக்காக நிரந்தர கட்டமைப்புக்கு 633 கோடி ரூபாயை ஒதுக்கினார். ஆனால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2015லும் பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இப்போ அதற்கு பிறகும் அதிமுக அரசிலும் செய்யப்பட்ட பிறகும் வெள்ளம் வந்துருக்கு.

நான் ஏழாம் தேதி சென்னையில் இருந்தேன், அதிகாலையில் ஒரு மணி நேரம் மழை தான், மாம்பழம் ஸ்டேஷனிலிருந்து வடபழனி வீட்டுக்கு போறவரைக்கும் 1 1/4 மணி நேரம் ஆச்சு, சிறிய கார் எல்லாம் நின்னு போச்சு. ஏன் ? நான் இப்போ ரெண்டு நாள் முன்னாடி பெங்களூர் போனேன் மழை பெய்து அரைமணி நேரத்துக்கு அப்புறம் மழை பெய்த சுவடு இல்லையே.

சென்னையில் இருக்கின்ற ஏரிகளை எல்லாம் வீடுகளாக்கி அதுவும் 67 எந்த திரவிடியன் ஸ்டாக் அது ஆட்சிக்கு வந்ததிலிருந்து தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஒழுக்கம் வேண்டாம், பொது வாழ்க்கைக்கும் ஒழுக்கம் வேண்டாம் என்ற எண்ணம் தமிழ் மக்கள் மனதில் வந்து போச்சு. ஏரிகள் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கல்வி நிலையங்களாக இருக்கு, வள்ளுவர் கோட்டம் இருப்பது ஏரியில் என விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், இப்போ ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் போடுகிறார்…  பாம்பேலயும் தான் மழை பெய்யுது, 2 மணி நேரம், 3 மணி நேரம், அப்புறம் வடிஞ்சிருதே. அப்போ தமிழ்நாட்டில் இந்த ஆறு மாதத்தில் குறைந்தது வடிகால் சிஸ்டத்தை சரி பண்ணி இருக்கலாமா ?  இல்லையா. நாங்க ஆட்சிக்கு வந்து ஆறு மாசம்தான் ஆகுது, இல்ல 67லிலேயே வந்துட்டீங்க, இடையில் மாறி மாறி வந்துட்டு இருக்கு.

 

Categories

Tech |