அமெரிக்க நாட்டின் பிரபல பாப் பாடகி 13 வருடங்களுக்குப் பிறகு அவருடைய அப்பாவின் அடைக்கலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் அவருடைய ரசிகர்கள் அச்செய்தியினை கொண்டாடி வருகிறார்கள்.
அமெரிக்க நாட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ் என்பவர் மிகவும் பிரபலமான பாப் பாடகியாக திகழ்கிறார். இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து அவருடைய தந்தை அவருக்கு பாதுகாவலராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் தற்போது 13 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபல பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் அவருடைய தந்தையின் அடைக்கலத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக அந்நாட்டின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெளியான தகவலை பாப் பாடகியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.