கவுஹாத்தியில் பல்வேறு மாணவ அமைப்புகள் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு(சிஏபி) எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே குடிமக்கள் திருத்த மசோதாவை நிறைவேற்றிவிட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நினைக்கிறது. வடகிழக்கு பகுதியில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த மசோதாவால் மீண்டும் பிரச்னை வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத அமைப்புகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவுகிறது. வரலாற்று, கலாச்சார உறவுகளை மேம்படுத்தி வணிகம் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகள் மக்களிடையே ஆதரவு பெற்றுவருகிறது.
இது குறித்து சமூக – அரசியல் வல்லுநர் மாயூர் போரா, “மதத்தின் அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்தும் குடிமக்கள் திருத்த மசோதா அரசியலமைப்பு எதிரானது. மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது. 34 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான அஸ்ஸாம் அமைதி உடன்படிக்கை மீறுவதாக அது உள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவிட்டு இந்த மசோதாவை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். இந்த மசோதாவால் அமைதி கெடும் அபாயம் உள்ளது” என்றார்.
1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. 1986, 1992, 2003, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியம், பெளத்தம், ஜெயின், பார்சி, கிறிஸ்துவம் மதத்தினருக்கு குடியுரிமை வழங்கும் பொருட்டு இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு 12 மாதங்கள் அவர்கள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.வேற்று மக்களின் வருகையால் மாற்றம் வந்து தாங்கள் வாழ்வதில் சிக்கல் ஏற்படும் என்பதை எண்ணியே பூர்வகுடிமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முன்னணி வழக்கறிஞர் பிஷ்வஜித் சபம் கூறுகையில், “பிரிவினைவாதத்திற்கு பேர் போன வடகிழக்கு மாநிலங்களில் தற்போது வன்முறை இன்றி அமைதி நிலவிவருகிறது. மக்களின் உண்மையான உணர்வுகளை புரிந்து கொள்ளாமால் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றிவிட மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால் பிரச்னைகள் தான் ஏற்படும் எனவும், பூர்வகுடிமக்களுக்கு அரசியல், பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்திட அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்றார்.
கலாச்சாரத்தாலும் செயல்பாடுகளாலும் இனத்தாலும் மற்ற மாநிலங்களைவிட வடகிழக்கு மாநிலம் மாறுப்பட்டுள்ளது. பூடான், சீனா, மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிரந்து கொண்டுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே 22 கிமீ தொலைவு உள்ளது. 2017ஆம் ஆண்டு தோக்லாம் பகுதியல் சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்தினர் 73 நாள்கள் போரிட்டனர்.
பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தான் மேற்கத்திய மரபுகளுக்கான நவீன வாழ்க்கை, கல்விக்கு எளிமையாக நகர்த்தியது. பிராந்தியத்தின் பழங்குடியின மக்களிடையே மோதல்களின் மரபையும் வளர்த்தது. எனவே இதுபோன்ற பின்னணியில், பல பகுதிகள் ஒரு தனி அடையாளத்தின் கருத்தின் அடிப்படையில் வன்முறை இயக்கங்களைக் கண்டன. இதன் விளைவாக, அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்டவை கிளர்ச்சி இயக்கங்களைக் கண்டன, அவற்றில் நாகா உலகின் இரண்டாவது மிக நீண்ட கால கிளர்ச்சி இயக்கமாகும்.
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு (சிஏபி) பின்னால் உள்ள உந்துதல் சந்தேகத்திற்குரியது, வடகிழக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதைக் காட்டுகிறது” என்று நாகாலாந்தைச் சேர்ந்த எழுத்தாளரும் இனவியலாளருமான டெம்சுலா ஓ கூறினார். “இது வடகிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு அச்சுறுத்தல் உள்ளது. மேலும் இந்த விவகாரம் பல காலங்களுக்குப் பிறகு சிறிது அமைதியைக் கண்டது,” என்று அவர் கூறினார்.