Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்த கொடுமைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”… டிடிவி தினகரன்…!!!

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு அடுத்தடுத்து நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளை தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கோவையில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது.

தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய அத்துமீறல்களை தடுப்பதில் தமிழக அரசு முழு அக்கறை காட்ட வேண்டும்” என்று அதில் பதிவிட்டு இருந்தார்.

Categories

Tech |