Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த இருவர் பிணம்…. விரைந்து சென்ற போலீசார்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

காவிரி ஆற்றில் மிதந்த மூதாட்டி உள்பட 2 பேர் உடலை மீட்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கரட்டுப்பட்டி அருகே உள்ள வைகை ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலும், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடலும் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி தேனி மாவட்டம் கருவேல்நாயக்கம்பட்டி சேர்ந்த ஜெயக்கொடி என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமாகிய நிலையில் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து தேடி வந்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஜெயக்கொடி என்பதை உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த மற்றொரு நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |