இந்தியா கடும் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் தன் நாட்டின் வழியாக இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடுமையான பஞ்சத்தினால் நடப்பு ஆண்டின் கடைசியில் சுமார் 10,00,000 பிள்ளைகள் பசியால் இறப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தான் நாட்டில் கடுமையான பஞ்சத்தால் சிக்கித்தவிக்கும் பொது மக்களுக்கு கோதுமை போன்ற உணவு பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது பாகிஸ்தான் நாட்டின் வான் மீது இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க பாகிஸ்தான் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.