கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு அணைகளும் நிரம்பி வழிகின்றது. மேலும் முக்கிய அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இரட்டை கரை சானலில் 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள ரயில் பாதையில் வெள்ள நீர் புகுந்து பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் தண்டவாளங்களில் மண் குவிந்துள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் ரயில்களான குருவாயூர் எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ், சாலிமர் எக்ஸ்பிரஸ் போன்ற 4 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மண் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மண் அகற்றிய பின்னர் சோதனைகளுக்கு பின் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.