பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கடைசியாக இவர் நடிப்பில் லாபம் படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
#NBK107 kicks off on an auspicious note with Pooja Event💥
Clap by #VVVinayak garu ❤️
Camera Switch on by #BoyapatiSreenu garu ❤️
First shot direction by @harish2you garu ❤️#KoratalaSiva garu, @dirbobby garu, @BuchiBabuSana garu handed over the script to @megopichand garu❤️ pic.twitter.com/KW0KkpTWGk
— Mythri Movie Makers (@MythriOfficial) November 13, 2021
சமீபத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தை கோபிந்த் மாலினேனி இயக்குகிறார். மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.