கோவை மாணவியின் மரணம் மனதை வருந்த செய்ததாக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். கோவையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் டூ மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் தனியார் பள்ளியின் ஆசிரியர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு அமைப்புகள் சார்பாக போராட்டம் நடைபெற்று வந்ததை அடுத்து பள்ளியின் முதல்வர் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாணவியின் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரை பறித்துள்ளது.பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.