Categories
மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 200 சிறப்பு மருத்துவர் முகாம்கள்…. தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….!!

சென்னையில் மழைக் காலங்களில் பரவும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒரு சில இடங்களில் கன மழையும் மற்றும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சென்னையில் கனமழை காரணமாக ஏற்படும் தொற்றுகளில் இருந்து மக்களை பாதுகாக்க மொத்தமுள்ள 200 வார்டுகளிலும் 2 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 400 மருத்துவ முகாம்களை திறக்க முதல்வர் உத்தரவிட்டார். இதன் முதற்கட்டமாக 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் 200 மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கும் விதமாக சென்னை தேனாம்பேட்டை அகஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் த.மு அன்பழகன் மற்றும் எம்பிகள் தமிழச்சி தங்கபாண்டியன் த.வேலு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி மேயர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |