Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்?…. உச்சநீதிமன்றம் புதிய பரபரப்பு அறிவிப்பு….!!!!!

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி கொண்டே வருகிறது.காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் அதிக அளவு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்வி ரமணா, டெல்லி என் சி ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். காற்று மாசுபாடு என்பது மிக மிக முக்கியமான பிரச்சனை.

இப்படி ஒரு சூழலில் பொதுமக்கள் வாழ்வது கடினம். காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அவசர நடவடிக்கைகள் தேவை. வேண்டுமென்றால் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம். அதுமாதிரி திட்டம் ஏதாவது அரசிடம் உள்ளதா? அடுத்த இரண்டு மூன்று நாட்களில் நிலைமை கட்டுக்குள் வர வேண்டும். அதற்கு ஏற்றவாறு அவசர நடவடிக்கைகளை முடுக்கி விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.மேலும் பொதுமக்கள் வீட்டிற்கு உள்ளேயும் முக கவசம் அணிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசு பாட்டுக்கு விவசாயிகளை மட்டும் குறை சொல்லக் கூடாது. வாகன கழிவு, ஆலைக் கழிவு உள்ளிட்ட விஷயங்களையும் அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |