பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் பா.ரஞ்சித். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.
இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பா.ரஞ்சித், விக்ரம் இணையும் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.