பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரேஷன்ஸ் நிறுவனம் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
The wait is over! ☺️☺️
Get ready for the #FirstRadheShyamSong to dominate your playlist! 💓 #RadheShyam
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/HMPELs2Bsz— UV Creations (@UV_Creations) November 13, 2021
அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த பாடல் வெளியாக இருக்கிறது. இதில் தமிழில் வெளியாகும் ஆகூழிலே பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.