தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது.
இந்நிலையில் புவியியல் துணை சேவை தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டினை (ஹால் டிக்கெட்) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு வருகின்ற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்ட தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள தங்களுடைய பதிவு எண் மூலம் www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.