Categories
தேசிய செய்திகள்

‘அடடே இது நல்ல யோசனையா இருக்கே’…. அலைமோதும் மக்கள் கூட்டம்…. மாநகராட்சியின் அதிரடி திட்டம்….!!

தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசியானது செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் நாம் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி தவணைகளை செலுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். நமது மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தருகிறது. அதனை மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி அதிக அளவில் செலுத்துகின்றனர். மேலும் தடுப்பூசி முகாம்கள்களும் அமைக்கப்பட்டு மக்களை ஊக்குவிக்க  பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதனால் மக்களும் தடுப்பூசி செலுத்துவற்காக கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். குறிப்பாக குலுக்கல் முறையில் பரிசுப் பொருட்களை வழங்க பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்த குலுக்கல் முறையானது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்படுகிறது. இது மக்களிடையே நல்வரவை பெற்றுள்ளது. தற்போது இது பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபூர் மாநகராட்சியில் இம்முறையை கையாண்டுள்ளனர்.

அதாவது தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் LED TV, FRIDGE, WASHING MACHINE  போன்ற வீட்டு உபயோக சாதனப் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 24 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் முதல் பரிசாக FRIDGE இரண்டாம் பரிசாக WASHING MACHINE  மற்றும் மூன்றாவது பரிசாக LED TV  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறுதல் பரிசாக பத்து நபர்களுக்கு MIXIE,GRINDER வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |