பலத்த மழையால் ரோட்டில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஊட்டியில் மத்திய பேருந்து நிலையம் மேல் பகுதியில் இருக்கும் எமரால்டு சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்துவிட்டது. இதனால் அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது மட்டுமில்லாமல் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மழை காலங்களில் ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் பணியில் தயார் நிலையில் இருக்கின்றனர்.