ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து நடைபெறும் சண்டையினால் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் தங்கள் நாட்டை விட்டு வேறு இடத்திற்கு புலம்பெயர்வோர்களின் எண்ணிக்கை உயரும் என்று ஐ.நா அகதிகளின் நல
ஆணையர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. ஆகையினால் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் போரை மையமாகக் கொண்டு தங்கள் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு புலம் பெயர்வோர்களின் எண்ணிக்கை உயரும் என்று ஐ.நாவில் பணிபுரியும் அகதிகளுக்கான நல ஆணையர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதோடு மட்டுமின்றி உலகம் முழுவதும் சேர்த்து மொத்தமாக தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை 8.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.