இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடங்கியது. மேலும் மத்திய அரசு இலவசமாக மாநிலங்களுக்கு வழங்குகிறது. இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு இதுவரை எந்தவித இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பொருட்டு விரைவு படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி 100 கோடி தடுப்பூசி இந்தியாவில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. எனவே பல்வேறு தரப்பில் இருந்து இந்தியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. பின்னர் இந்த வருட இறுதிக்குள் 100 கோடி பேருக்கு 2 -ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அதை சாத்தியமாக்குவதற்கு தினந்தோரும் 1 கோடி பேருக்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மருத்துவ செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து இந்தியா முழுவதும் 18 வயதை கடந்த 79% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 38% பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டேவியா காணொளி மூலமாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அந்த கூட்டத்தில் பேசிய அவர் பொதுமக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமாக பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் தடுப்பூசி மையங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.