Categories
மாவட்ட செய்திகள்

ஆய்வு நடத்திய காவல்துறை ஆணையர்…. மீட்புக்குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

மீட்பு பணியில் உள்ள போலீஸ் குழுவினருக்கு சென்னை காவல்துறை ஆணையர் நேரில் சென்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மழை வெள்ள மீட்பு பணியில் உள்ள போலீஸ் குழுவினரை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது  ஓட்டேரி நல்லா கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட ஏழுமலை என்பவரை காப்பாற்றிய போலீஸ் குழுவினர், சூளை அஷ்டபுஜம் சாலையில் 2 வயது குழந்தையை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான குழுவினர், பி.எச்.சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்த எழும்பூர் காவல் ஆய்வாளர் ஜானி செல்லா தலைமையிலான மீட்புக்குழுவினருக்கு பாராட்டுக்களை கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தேனாம்பேட்டையில் 70 வயதான முதியவரை காப்பாற்றிய  காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான குழுவினர், ஓட்டேரி பகுதியில் 15 வயது சிறுவனை மீட்ட காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மீட்புக் குழுவினர் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக டி.பி. சத்திரம் பகுதியில் மயங்கி கிடந்த மயான பணியாளரான உதயகுமாரை காப்பாற்றிய பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினருக்கு பாராட்டுக்களை நேரில் சென்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |