Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது….என் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்ல… பரபரப்பை ஏற்படுத்திய வைகோ…!!!

முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்து கூறுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என வைகோ அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயரத்திற்கு நிரப்பிக் கொள்ளலாம் என்பதை குறைத்து தற்காலிகமாக 136 அடியாக குறைத்து கொள்வது என்றும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு மீண்டும் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என கேரள அரசும் தமிழ்நாடு அரசும் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டன.

அதைத் தொடர்ந்து அணை பலவீனமாக உள்ளது என கூறி கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு அரசு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. வழக்கின் முடிவில் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் எனவும் பேபி அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு கொடுத்தது. இதனை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. அணையை சோதிப்பதற்காக உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு நிபுணர் குழு அமைத்து இருந்தது. அந்த குழுவும் அணை வலுவாக உள்ளது என அறிக்கை கொடுத்தது.

இந்த கட்டத்தில் கேரள அரசு புதிய அணை புதிய கரார் என்ற குரலை எழுப்பி ஏற்கனவே இருக்கின்ற அணையை உடைப்போம் என்றது. இந்த கட்டத்தில் நாங்கள் இதை எதிர்த்து போராடி முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இல்லையெனில் கோடிக்கணக்கான மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கும் என்ற பிரச்சாரத்தை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து கேரளாவிற்கு செல்கின்றது சாலைகளையும் இரண்டு முறை தடுத்து முற்றுகை போராட்டம் நடத்தினேன். அப்போதுதான் பாரதி ஜனதா கட்சியில் இப்போது வந்து சேர்ந்து இருக்கிற அண்ணாமலை முதலில் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு தமிழ் நாட்டை பற்றி ஒன்றும் தெரியாது. இதனால் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. தென்மாவட்டங்களில் முல்லைபெரியாறு என்றால் பென்னிகுக் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினேன். தேனி மாவட்ட ஆட்சியரும் இடுக்கி மாவட்ட ஆட்சியரும் அடிக்கடி கலந்து கொண்டு பேச வேண்டும். முல்லை பெரியாறு அணை பிரச்சனை ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்ட ஒன்றாகும். அணையை உடைக்கலாம் என்று தற்போது கேரள அரசு திட்டமிட்டு வருகிறது. அதனை எதிர்த்து தமிழக மக்கள் பொங்கி எழுவார்கள். இந்தப் பிரச்சினையைப் பற்றிய அகரம்கூடத் தெரியாத அண்ணாமலை என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |