Categories
மாவட்ட செய்திகள்

கடைக்கு போன சிறுமிக்கு…. நடந்த அசம்பாவிதம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையிலுள்ள திருவெற்றியூரில் இருக்கும் கலைஞர் நகர் பகுதியில் சிட்டி பாபு என்பவர்  அவரது மனைவி அம்பிகா, இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டாவது மகளான கமலி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கனமழை பெய்ததால் கலைஞர் நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்டிபாபு வீட்டில் மழை நீரானது புகுந்துள்ளது.

இதனால் தனது இரண்டு மகளையும் சிட்டிபாபு கலைஞர் நகர் 10வது தெருவில் வசிக்கும் அவரின் சகோதரிக்கு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து மாலை 6.30 மணியளவில் கமலி உட்பட மூன்று சிறுமிகள் அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளனர். குறிப்பாக அங்கு திடீரென மின்சாரம் இயக்கப்பட்டு உள்ளது. அதிலும் அருகில் இருந்த மின்சார பெட்டியை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனை அறியாமல் கமலி மழை நீரில் கால் வைத்துள்ளார். இதனை அடுத்து தண்ணீரில் பாய்ந்த மின்சாரத்தினால் அவர் தூக்கி எறியப்பட்டார். இதனை தொடர்ந்து மற்ற 2 சிறுமிகளையும் தண்ணீரிலிருந்து உடனடியாக அருகில் இருந்த இளைஞர்கள் தூக்கியுள்ளனர். இது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து உடனடியாக அப்பகுதியில் மின்சாரமானது துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் கமலியை மீட்டு திருவெற்றியூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு கமலியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |