Categories
உலக செய்திகள்

பட்டினியின் பிடியில் சிக்கி தவிக்கும் பிரபல நாட்டு மக்கள்…. ஐ.நா சபை வேதனை….!!

ஆப்கானிஸ்தானில் போதுமான உணவு இன்றி 95 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கஷ்டப்படுவதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பிறகு ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவற்றால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஐநா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை சேர்ந்து மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறது.

இதுகுறித்து ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லீ கூறுகையில்,ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போது கடுமையான மனிதநேய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இங்கு வசிக்கும் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் போதுமான உணவு இன்றி பட்டினியின் பிடியில் ஆட்டிபடைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் உலக அளவில் ஐநா சபைக்கு 400 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன் என்றும் இது ஒரு வெட்கக்கேடான விஷயம் எனவும் அவர் கூறினார். மேலும் உலக அளவில் மக்கள் உதவிட முன்வர வேண்டுமெனவும் அவர் கூறினார்.

Categories

Tech |