Categories
அழகுக்குறிப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப் பருக்களை நீக்கும் சந்தனம்….!!

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

சந்தனம், பால் , கடலை மாவு, மஞ்சள் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் மிகவும் அழகாகவும் மாறும்.

மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும் , மருந்துகளிலும் அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப் பொருட்களாக சொல்லப்படுகிறது.

சந்தனம் தோலில் உள்ள வியாதிகள் முகப் பருக்கள் அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகளையும் குணமாக்க உதவுகின்றது சந்தனத்தை வெளிபுற தோலில் பயன்படுத்தும்போது தோலுக்கு இதமான குளிர்ச்சித்தன்மை உண்டாகும்.

பசும்பால் விட்டு சந்தனக்கட்டையை அரைத்து அதை உடலில் பூசி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் தளர்ந்த சதை எல்லாம் இறுகி உடல் பளபளப்பாக இருக்கும்.

Categories

Tech |