Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

தமிழகத்தில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலமாக மாதந்தோறும் அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். உயர்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான ஊக்கத்தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். அதில் தகுதி உடையவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்நிலையில் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை அரசு தேர்வுகள் இயக்ககம் நீட்டித்துள்ளது. அதன்படி விண்ணப்பிக்க நவம்பர் 13 கடைசி தேதியாக இருந்த நிலையில் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |