பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் 30 வயதிற்கு குறைவானவர்கள் மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஜெர்மனி நாட்டில் தடுப்பூசி ஸ்டாண்டிங் கமிஷன் என்ற நிபுணர்கள் குழுவானது, மாநிலங்களுக்கு தடுப்பூசி தொடர்பில் ஆலோசனை அளித்துவருகிறது. இக்குழு, 30 வயதுக்கு குறைவான நபர்கள் Pfizer-BioNTech தடுப்பூசியைத் தான் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
மாடெர்னா தடுப்பூசி செலுத்தியவர்களை விட பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் வயது நபர்கள், இதய அலர்ஜியின் விகிதங்களை குறைவாக பெற்றிருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. இதேபோன்று பிரெஞ்சு சுகாதாரத் துறைக்கு ஆலோசனை அளிக்கும் குழுவானது, 30 வயதிற்கு குறைவானவர்களுக்கு அரிதாக வரும் இதய அலர்ஜியின் ஆபத்து, மாடர்னா தடுப்பூசி பெற்றவர்களை விட பைசர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 5 மடங்கு குறைவாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறது .
எனவே, தற்போது பிரான்ஸ் நாட்டிலும் இனிமேல் 30 வயதுக்கு குறைவானவர்கள் மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே ஸ்வீடன், நார்வே, டென்மார்க் மற்றும் பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் இளம் வயது நபர்கள், மாடர்னா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தடை அறிவித்திருந்தது. தற்போது அந்த பட்டியலில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இணைந்துள்ளன.