பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் மொத்தம் 1 கோடியே 5 1/4 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் துணை ஆணையர் கூடுதல் பொறுப்பு சபர்மதி மற்றும் இந்து அறநிலைய உதவி ஆணையர் அன்னக்கொடி முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
அப்போது உண்டியல்களில் பக்தர்கள் மொத்தம் 1 கோடியே 5 லட்சத்து 35 ஆயிரத்து 535 ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தார்கள். அதுமட்டுமின்றி கோவில் உண்டியலில் 1 கிலோ 190 கிராம் தங்கமும், ஒரு கிலோ 175 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த பணியின்போது பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.