Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் அதிகரித்த பாதிப்பு எண்ணிக்கை!”.. எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, நேற்று தான் அதிகமான தொற்று  எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராபர்ட் கோச் என்ற தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று 37,120 நபர்களுக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதுதான் அதிகமான தொற்று எண்ணிக்கையாக பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்று மட்டும் 39,676 நபர்களுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் பலர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, விரைவில் தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், மீண்டும் ஊரடங்கு அமல்ப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று பெர்லின் சாரிட் மருத்துவமனையை சேர்ந்த வைராலஜி தலைவரான Christian Drosten எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும், தற்போது தான் அவசர நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உடனடியாக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |