வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதனால் கடலோர மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தி நகர், திருவான்மியூர், தரமணி, சைதாப்பேட்டை,ராயபுரம் மற்றும் அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்கிறது. அதனால் சென்னை முழுவதும் கடல் போல காட்சியளிக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூட வெளியே வர முடியாமல் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.