Categories
டென்னிஸ் விளையாட்டு

ஏடிபி பைனல்ஸ்: ஸ்வெரவ்-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் தீம்!

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டொமினிக் தீம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

லண்டனில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டொமினிக் தீன், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-வை எதிர்கொண்டார்.

Image result for The moment @ThiemDomi secured his place in the #NittoATPFinals championship match

பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம் முதல் செட் கணக்கை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்வெரவ்-வுக்கு அதிர்ச்சியளித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம் 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

Image result for The moment @ThiemDomi secured his place in the #NittoATPFinals championship match

இதன் மூலம் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் டொமினிக் தீம் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-வை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Image result for The moment @ThiemDomi secured his place in the #NittoATPFinals championship match

இதையடுத்து நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், கிரீஸ் நாட்டின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |