Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியை காப்பாற்றணும்…! இனி இதுக்குலாம் தடையாம்…. போடப்பட்ட சூப்பர் உத்தரவு ….!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபடுவதை தடுக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு கடந்த 1 வாரத்துக்கு மேலாக மிக மோசம் என்ற நிலையிலேயே நீட்டித்து வருகிறது.குறிப்பாக அண்டை மாநிலங்களில் காய்ந்த விவசாய பயிர்களை தீ வைத்து எரிப்பது, வாகனங்கள் வெளியிடும் புகை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. காற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று சில பரிந்துரைகளை வெளியிட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து, அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.

மேலும் வணிக வளாகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்ற அவர், இதன் மூலம் பொதுமக்கள் சொந்த வாகனத்தை தவிர்த்து, பொதுப் போக்குவரத்தை நாடுவார்கள் என்பதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Categories

Tech |