அசாம் மாநிலத்தில் உள்ள சில்சாரியிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்லவேளையாக உரிய நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து ஏற்படாமல் தடுக்க முடிந்தது.
ஏர்பஸ் ஏ319 விமானம் ஒரு குறுகிய முதல் நடுத்தர வகையை சேர்ந்தது. இதில் 124 முதல் 156 பயணிகள் வரை பயணிக்கும் வசதி கொண்டது . அதனைப்போலவே கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி பயணி ஒருவர் மூச்சு திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.