சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அக்ரகார தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேனி காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு மகேந்திரன் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார்.
இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். அதில் 140 மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மகேந்திரனையும் கைது செய்துள்ளனர்.