முல்லை பெரியாறு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டு கொடுத்த திமுக அரசுக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
மேலும் மாவட்ட நகர் செயலாளர் அங்குசாமி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகரன், டாக்டர் முத்தையா, முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால் பாண்டியன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் சாமிநாதன், ஜெயலலிதா பேரவை செயலாளர் செதுபாலசிங்கம் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.