Categories
உலக செய்திகள்

‘ஆப்கான் மக்கள் அங்கீகரிக்க வேண்டும்’…. டெல்லியில் நடைபெறும் மாநாட்டில்…. பாதுகாப்பு ஆலோசகர்கள் வலியுறுத்தல்….!!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடானது அஜித் தோவல் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

டெல்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடானது நடைபெறவுள்ளது. இந்த மாநாடானது  தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக அவர் உஸ்பெஸ்கிஸ்தான், தஜகிஸ்தான் போன்ற நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதிலும், தலீபான்கள் அரசை  உலக நாடுகள் அங்கீகாரம் செய்வதற்கு முன்பாக முதலில் ஆப்கான் மக்கள் அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இன்று நடைபெறும் இந்த மாநாட்டிற்கு மத்தியில் அஜித் தோவல் ஈரான், ரஷ்யா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் உறுப்பினர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதில் முக்கியமாக கட்டுமானப்பணிகள், எல்லை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |