பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருக்கும் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து பிரபல நிறுவனம் வெளியிட்டதில் ‘நைஜரில் இரண்டாவது பெரிய நகரம் மராடி ஆகும். அங்குள்ள பள்ளி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் கூரையால் வேயப்பட்ட மூன்று மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வகுப்புகள் தீயில் கருகின. இதனால் 3 முதல் 8 வயதுக்குட்ப்பட்ட 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் தற்காலிகமாக கூரைகளை கொண்டு வகுப்புகளை அமைத்துள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நியாமோவின் புகர்ப் பகுதியில் நடந்த தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தனர். தற்பொழுது மீண்டும் அதே போன்று நடந்துள்ளது. அதாவது வைக்கோலால் வேயப்பட்ட வகுப்பறையின் ஆபத்தை இந்த சம்பவங்கள் உணர்த்துவதாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.