பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு கொலை சம்பவம் தொடர்பில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் ஃபிஷ்டாஃப்டில் உள்ள வனப்பகுதி ஒன்றுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அன்று மார்செல் க்ரெஸ்ஸஸ் (15 ) என்ற சிறுவன் லேடெக்ஸ் கையுறை அணிந்து பெரிய கத்தி ஒன்றை கையில் ஏந்தியவாறு சென்றுள்ளார். பின்னர் அந்த வனப்பகுதிக்கு க்ரெஸ்ஸஸ் தனது வகுப்பு நண்பன் ராபர்ட்ஸ் பன்சிஸை ( 12 ) வரவழைத்து கத்தியை கொண்டு சிறிதும் பயமின்றி ராபர்ட்ஸ் பன்சிஸை 70 முறை க்ரெஸ்ஸஸ் தாறுமாறாக குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ராபர்ட்ஸ் பன்சிஸ்-க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, அவனுடைய வலது பக்கம் கைகள் மற்றும் தோள்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வெட்டுக் காயங்கள் மண்டைப் பகுதியில் ஆழமாக தென்பட்டுள்ளது. இதற்கிடையே கத்தியால் குத்தப்பட்ட ராபர்ட்ஸ் பன்சிஸ் தனது தந்தையுடன் லாட்வியாவில் வசித்து வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் ராபர்ட்ஸ் பன்சிஸ்-ன் தந்தை Edgars தனது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து பெரும் சோகத்தில் மூழ்கினார். இதையடுத்து Grzeszcz தனது கொலைவெறியை போக்கிக் கொண்டதோடு, பேஸ்புக் மெசஞ்சரில் “விஷயங்கள் தவறாக நடந்துவிட்டது” என்பதை ஒப்புக்கொண்டு மற்ற நண்பர்களுக்கு செய்தியினை அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் Grzeszcz-ஐ காவல்துறையினர் அவரது வீட்டிற்கே சென்று கைது செய்துள்ளனர்.
அதேசமயம் காவல்துறையினர் Grzeszcz வீட்டை சோதித்தபோது ஒரு செடியில் பானையின் கீழ் ரத்தத்துடன் இருந்த கத்தி ஒன்றையும் மீட்டுள்ளனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Grzeszcz போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்ததும், கத்தியை காட்டி சக மாணவர்களை மிரட்டியதும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து லிங்கன் கிரவுன் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதி அன்று இந்த கொலை வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. பின்னர் Grzeszcz மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.