சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு பிராஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர. அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் செல்லத்துரை, ஒரு சிறுவன் என்பதும் அவர்கள் 2 பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதேபோன்று பத்தமடையில் கஞ்சா விற்பனை செய்த சிவானந்தா காலனி பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.