உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் டிஎஸ்பி-யாக பொறுப்பேற்ற அபெக்ஷா நிம்பாடியா தனது தந்தையான எபிஎஸ் நிம்பாடியா அவர்களுக்கு சல்யூட் செய்துள்ளார். அப்போது அதை பெருமையுடன் ஏற்ற அவருடைய தந்தையான டிஐஜி, தன் மகளுக்கு மீண்டும் சல்யூட் அடித்துள்ளார்.
தன்னுடைய மகளின் பட்டமளிப்பு அணிவகுப்பு விழாவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை இந்திய – திபெத் எல்லைக் காவல்படையின் (ITBP) இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த பெருமைமிகு தருணத்தை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.