தங்கள் ஆட்சியில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்க விடவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்வில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு நாள் மழைக்கே தாங்காத இந்த அரசு பெருமழையை எப்படி சமாளிக்கும் என்று கேள்வி எழுப்பியவர். இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.