‘வலிமை’ படத்தை ஹிந்தி மொழியிலும் வெளியிட வேண்டுமென தயாரிப்பாளரிடம் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் ”வலிமை” படத்தில் நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார்.
இதனையடுத்து, பல முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது பல மொழிகளில் வெளியாகிறது. அந்த வகையில், தற்போது ‘வலிமை’ படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியிட வேண்டுமென தயாரிப்பாளரிடம் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், இந்த படத்தின் ஹிந்தி டிரைலரையும் வெளியிட வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.