Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி… 14-ம் தேதி வரை நீட்டிப்பு… ஆசிரியர் தேர்வு வாரியம்!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடை விடாது கனமழை பெய்து வருகிறது.. இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.. மழை காரணமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது..

Categories

Tech |