சிரஞ்சீவி நடிப்பில் உருவாகவுள்ள போலா ஷங்கர் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆச்சாரியா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் காட்பாதர், போலா ஷங்கர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் போலா ஷங்கர் படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
Honored and ecstatic to be a part of the MEGA MASSIVE MOVIE #BholaaShankar 🔱
Can't wait to share the screen with @KChiruTweets sir once again!
Bring it on @MeherRamesh Gaaru! 😎@AnilSunkara1 @KeerthyOfficial @AKentsOfficial @BholaaShankar pic.twitter.com/YV0fIm3uVp— Tamannaah Bhatia (@tamannaahspeaks) November 9, 2021
மெஹர் ரமேஷ் இயக்கும் இந்த படத்தை எகே என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போலா ஷங்கர் படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது .