Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கார் கதவு மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. விவசாயிக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி பகுதியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காட்டூர் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்திய டிரைவர் தன்பக்கமுள்ள கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் திறக்கப்பட்ட கார் கதவில் பயங்கரமாக மோதினார். இதனால் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உயிரிழந்தவர் தஞ்சையை அடுத்த கீழஊளூரை சேர்ந்த விவசாயி முத்துகிருஷ்ணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து முத்துகிருஷ்ணனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |