‘டான்’ படத்தின் அப்டேட்டை சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் படம் ”டான்”. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, முனிஷ்காந்த், பாலசரவணன், சிவாங்கி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இவர் தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
https://www.instagram.com/p/CWDAL9dFbyp/