தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.அதனால் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்.
எனவே காவிரி கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்களின் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாமக்கல் குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்தி வேலூர்,மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோர இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.