கனமழை எதிரொலியின் காரணமாக சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளன..
சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு இடங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது.. இதனால் பல இடங்களில் சாலைகள், வீடுகளிள் தண்ணீர் புகுந்துள்ளது.. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. மீட்பு பணிகள் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது…
இந்தநிலையில் தற்போது மீட்பு பணிக்கு தேவையான அதிநவீன கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 3 குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைந்துள்ளது.. மணலி, தாம்பரம், பெரும்புலிபாக்கத்திற்கு தலா ஒரு குழு என பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழு விரைந்தது.. மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் புறப்பட்ட நிலையில், மேலும் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன..