தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் இன்று 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நீர் திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன் பிறகு 10 ஆயிரம் கன அடி வீதம் ஆகும், 6 மணிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் காவிரி கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.