இத்தாலியில் பருவநிலை மாற்றம் உட்பட சில முக்கிய காரணங்களால் சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு அதிபயங்கரமாக கனமழை பெய்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இத்தாலியில் பருவநிலை மாற்றம் உட்பட சில முக்கிய காரணங்களால் வழக்கத்திற்கு மாறாக அதி பயங்கரமாக கனமழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கனமழை 1 மீட்டர் அளவு வரை இருக்கலாம் என்று அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதையடுத்து இத்தாலியில் பெய்த கனமழையால் வணிகவளாகம் உட்பட பொதுமக்கள் பயன்படுத்தும் பல பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. அதோடு மட்டுமின்றி இத்தாலியிலுள்ள புனித மார்க் துக்கத்தையும் கன மழையினால் பெய்த மழை நீர் சூழ்ந்துள்ளது.