புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய SP நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது.
தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 16 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யபட்டுள்ளனர்.
இதில் ,
கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக டி.ஜெயச்சந்திரன் நியமனம்,
தென்காசி எஸ்.பி.யாக சுகுணா சிங் நியமனம்
ராணிப்பேட்டை எஸ்.பி.யாக மயில்வாகனன் நியமனம்,
திருப்பத்தூர் எஸ்.பி.யாக விஜயகுமார் நியமனம்,
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக கண்ணன் நியமனம்